மதுரை விமான நிலையம் அருகே பாப்பான்ஓடை, ராமன்குளம், தின்னாநேரி கிராமங்களில் வசிக்கும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திட சின்ன உடைப்பு கிராமத்தில் மதுரை விமான நிலையம் தடுப்பு சுவரிலிருந்து மங்கம்மா சாலை வரை சர்வீஸ் சாலை அமைத்து தராத அரசைக் கண்டித்து தலித் விடுதலை இயக்கம் சார்பாக மதுரை விமான நிலையம் ஓடுதளம் பாதை அருகே சின்ன உடைப்பு கிராம் நான்கு வழிச்சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்ன உடைப்பு கிராமத்தில் ஏற்கனவே விரிவாக்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அதன் அருகே உள்ள கிராமங்களில் சர்வீஸ் சாலை அமைத்து தராதத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தலித் விடுதலை இயக்கம் தலைவர் கருப்பையா, காங்கிரஸ் பெரும்பான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெபக்கனி, தமிழ்நாடு இரவியல் கல்லூரி இயக்குனர் ஞானபிரபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை தெற்கு மண்டல துணை தாசில்தார் கில்டா, அவனியாபுரம் வருவாய் ஆய்வாளர் விமலா,அவனியாபுரம் காவல் உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன், போக்குவரத்து உதவி ஆணையாளர் செல்வின் ஆகியோர் பேச்சு வார்த்தையை நடத்தி சர்வீஸ் சாலையை ஜேசிபி வாகனம் கொண்டு சரி செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.





