• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

உயரும் வெப்ப நிலை… டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்..

Byகாயத்ரி

Apr 28, 2022

டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கும் வெப்ப நிலையால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட் விடப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்லியில் 1941-ம் ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன்பிறகு தற்போது தான் இந்த அளவிற்க்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.