மதுரையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய சமூக நீதிப் பேரவை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிலரங்கம் நடைபெற்றது.
மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில்
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய சமூக நீதிப் பேரவை சார்பாக
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்க நிகழ்ச்சிக்கு அனீஸ்ஷேக்தாவூத் தலைமையில் சிக்கந்தர் பொறியாளர் பகுருதீன்அலி அகமது,பீர், முன்னிலையிலும் அக்பர்,நன்றியுறை கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக RTIஹக்கீம் கலந்து கொண்டு பயிற்சி உரையாற்றினார். மேலும், தகவல் உரிமை சட்டமானது அனைவருக்கும் சமமானது எனவும், அச்சட்டத்தினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். சட்டத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பயிலரங்கத்தில் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.