மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் தி ரைஸ் உலகளாவியத் தமிழ் தொழில் அமைப்பின் 16-வது மாநாடு, ஜனவரி 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

அமெரிக்கா , பிரான்ஸ் ,பிரிட்டன் ,சிங்கப்பூர் மலேசியா இலங்கை, இந்தோனேசியா துபாய் ,ஒமன் ,கத்தார் ஜெர்மனி ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் மூலம் சுமார் ₹2,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் இதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் அறிவுசார் மறுமலர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அடுத்த 70 ஆண்டுகளை (2026-2096) சங்கமம் 5 யுகமாக அறிவித்து இந்த மாநாடு முன்னெடுக்கப்படுகிறது.
ரைஸ் அமைப்பில் உலக தமிழ் தொழில் தகவல் 16வது மாநாட்டில் தொழில்நுட்பம்,சரக்கு போக்குவரத்து,மருத்துவம், கல்வி, மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி போன்ற துறைகளில் தனித்தனி கருத்தரங்கம் மற்றும் சிறு மாநாடுகள் நடத்தப்படுகின்றன .
மாநாட்டின் தொடக்க நிகழ்வாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் உலக ஜல்லிக்கட்டு”
போட்டியும், நிறைவு நாளில் கீழடியில் வரும் 11ம் தேதி உலகத் தமிழர் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
இரண்டு சமூகத்திற்காக துவக்கப்பட்ட விதிகளில் சமஸ்கிருதம் கொண்டு வந்த விதிகள் மனிதனை பங்கு போட்டது. திராவிடம் பங்கு போடவில்லை தமிழும் பங்கு போடவில்லை.
இந்த இரண்டு பண்பாட்டிற்கும் மோதல் வந்தது அந்த மோதல் இப்போது அரசியலில் களத்தில் வேறு வடிவமாக இருக்கிறது.
அந்த மோதலுக்கும் அரசியல் வடிவத்திற்கு போகாமல் ஆன்மீக வடிவத்தோடு வந்திருக்கிறது.
பெரியார் முட்ட பாறையை கும்பிடுகிறீர்கள் என சொல்வார் அந்த மேடையில் பெரியாருக்கு அழுகிய முட்டை, பாம்பு, மலம் உள்ளிட்டவை வரும்., அதே இடத்திற்கு அறிஞர் அண்ணா போவார் நடைபெற்ற நாடக நிகழ்ச்சிகள் பங்கேற்பார். நடராஜர் எவ்வளவு நாளாக ஆடிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் அதுபோல் நீ நிற்பதற்கே கால் வலிக்கிறது என கூறுவார் அதற்கு அது கல் தானே என கூறினார்கள் இதைத்தான் பெரியாரும் கூறினார் என்றார்.
இங்கு எல்லா மதங்களும் உள்ளது. எல்லா மதங்களும் உலகம் எப்படி தோன்றியது என வெவ்வேறு விதங்களாக கூறுகிறார்கள். இறைவன் இந்த உலகத்தை படைத்தான் இது எல்லா மதமும் ஒத்துக்கொள்கிறது.
இந்த உலகத்தை இறைவன் படைக்கவில்லை, அறிவியல் பூர்வமாக நிகழ்ந்தது என்று சொன்ன ஒரே இனம் தமிழினம். இந்த தமிழகத்திற்கு இறைவன் தேவைப்பட்டான் தொல்காப்பியத்திலும் ஆன்மீகம் இருக்கிறது.

இந்த அறிவியல் உண்மையை உலகத்திற்கு முதல் முதலாக சொன்னவன் தொல்காப்பியம். உலகம் யாராலும் படைக்கப்படவில்லை பஞ்சபூதங்களால் ஆனது.
இந்த உலகத்தின் எடை மாறாது பஞ்சபூதங்களால் ஆனது என கூறிய நியூட்டனுக்கு நோபல் பரிசு. தொல்காப்பியம் தமிழர்களிடையே செல்லவில்லை. அதற்கான முயற்சிதான் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
திருக்குறள் சொல்லாத அறம் ஏதாவது உண்டா.? வள்ளலார் இல்லையென்றால் இந்த மண்ணில் திராவிட இயக்கம் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்காது.
வள்ளலார் இப்போது இங்கு இருக்கும் கடவுளை நான் ஏற்கவில்லை இனிமேல் எனக்கு சிவன், விஷ்ணு கடவுள் இல்லை. என்னுடைய சுத்த சன்மார்க்க சங்கத்தின் கிறிஸ்தவர்களும் சேரலாம், இஸ்லாமியர்களும் சேரலாம், இந்துக்களும் சேரலாம். அன்பு, கருணை, பசி நீக்கம் இவைதான் எங்களுடைய கொள்கை இதை ஏற்றுக்கொள்ளக்கூடிய இறைவனை நாம் ஏற்றுக் கொள்ளும் தலைவன்.
இதுதான் பெரியாரும் சொன்னார் கடவுளை ஒழிக்க வரவில்லை ஜாதியை ஒழிக்க தான் வந்தேன், ஜாதி மதத்தில் இருக்கிறது என்று சொன்னார்கள் மதத்தை ஒழிங்கள் என சொன்னேன், கடவுளில் இருக்கிறது என்று சொன்னார்கள் அதனால் கடவுளை ஒழிக்கிறேன் என சொன்னார்.
என்னது நோக்கம் ஜாதியை ஒழிக்க வேண்டும் அதற்காக மதத்தை ஒழிக்க முற்பட்டேன் மதம் கடவுளால் உருவாக்கப்பட்டது இந்த கடவுளை ஒழிக்க முற்பட்டேன் என்றார் பெரியார் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா கூறினார்




