
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 5 ஆம் மாநாடு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு, சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமகிருஷ் ணன் வரவேற்றார்.

மாவட்ட இணைச் செயலாளர் பானு துவக்க உரையாற்றினார். செயலாளர் வேல்மயில் மாநாட்டு அறிக்கையும்,பொருளாளர் பாண்டியம்மாள் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சூசைநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட தன் தலைவர் கிருஷ்ணன் நிறைவுறையாற்றினார். வட்ட கிளை துணைத் தலைவர் காமாட்சி தீர்மான அறிக்கை வாசித்தார். இந்த கூட்டத்தில், நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்க வேண்டும். வாடிப்பட்டி வட்டத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். வாடிப்பட்டி அலங்கா நல்லூர் பகுதியில் மா கொய்யா பழங்களுக்கு குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும்.

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை உயிர் காக்கும் பல்நோக்கு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டு ம். முதியோருக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.
