• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப்பை அடுத்து மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்

Byமதி

Nov 17, 2021

மேற்கு வங்க மாநிலத்தின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கிமீ வரை எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய எல்லைக்குள் 50 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும், பொருட்களை பறிமுதல் செய்யவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) மத்திய அரசு அக்டோபர் மாதத்தில் அதிகாரம் அளித்தது.

இதை எதிர்த்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மேற்கு வங்க அரசு. பஞ்சாபிற்கு அடுத்தபடியாக, இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.