• Fri. Apr 26th, 2024

ராஜினாமாவா? வாய்ப்பே இல்ல. – கர்நாடக முதல்வர்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை .


கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.


75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அந்த வகையில் மேலிடத்தின் உத்தரவை ஏற்று அவர் கடந்தாண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.

இவரது தந்தை எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, பசுவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அரசியல் வட்டாரங்களில் வதந்தி கிளம்பியது. இதையடுத்து, கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *