• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தனி கவுன்சில் அமைத்து தர கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை..,

ByT. Balasubramaniyam

Oct 30, 2025

அரியலூர். கட்டுமான பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும் மற்றும் தமிழக முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் ஒற்றை பதிவு முறை யினையும் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின், உடனடியாக நிறைவேற்ற தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் கு . சின்னப்பாவிடம், அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்க தலைவர் தியாக அறிவானந்தம், செயலாளர் பி நாகமுத்து, பொருளாளர் ஆர் கார்த்திக், சாசனத் தலைவர் வி சீனிவாசன், உடனடி முன்னாள் தலைவர் டி அழகு தாசன், துணைத் தலைவர் எஸ் செந்தில் குமார், முன்னாள் தலைவர்கள் ஏ எஸ் ஏ செந்தில்குமார்,சி அன்பழகன் உள்ளிட்டோர்,கூட்டாக , அவரை நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,இக் கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானபொறியாளர் சங்கங்களில் மற்றும் 97 தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கட்டடப்பொறியாளர் சங்கங்களை உள்ளடக்கி யது. 97சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டம் பெற்ற பொறியாளர் கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள்,2021 திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையின் பக்கம்65-ல் வரிசை எண் 471-இல்தாங்கள்,அறிவித்துள்ளது போல தமிழகத் தில் கட்டடப்பொறி யாளர்கள் கவுன்சில் அமைத்து இந்திய அரங்கில் உள்ள தனித்தன்மைக்கு பெருமைசேர்த்திடும் வகையில் நிறைவேற்றி த்தரும்படி அன்புடன் வேண்டு கிறோம்,இதன் காரணமாக முதல்முதலாக குஜராத் மாநிலம் 2006 ஆம்ஆண்டு மற்றும் THE KARNATAKA PROFESSIONAL CIVIL ENGINEER ACT, 2024, அவர்கள் மாநிலத்திற்கு என ஒருகட்டடபொறியாளர் கவுன்சிலை உருவாக்கி செயல்வடிவம் கொடுத்து உள்ளனர்.பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒரு இடத்தில் பதிவுசெய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில்பதிவுகளைஏற்றுக்கொள்ளுமாறும், மாநிலம்முழுவதும் ஒரேபதிவநடைமுறையை ஏற்படுத்தித் தர வேண்டும்,

பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒருமுறை பதிவுசெய்தால் ஆயட்காலம் வரை செல்லத்தக்கதாகவும், மேலும்பதிவினை புதுப்பித்தல் அவசியமில்லை என்றநடைமுறையைநடைமுறைப்படுத்திதரவேண்டும், சுயசான்று (SELF.DECLARATION) அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதில், பொறியாளர்கள் வரை படம் தயார் செய்ய வும், கையெழுத்து செய்யவும் நடைமுறையை மாற்றா மல் (G.O.No:133, Dt.18.07.2024)-ன்படி தொடர வேண்டுமாய் மேலும்பொறியாளர்களுக்கு OTP வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.