விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிரமத்திலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் மழைநீர் கடந்து செல்ல வரத்து கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது.

சிறிய மழை பெய்தாலும் தரைப்பாலம் மூழ்கி விடுவதால் இதன் வழியாக செல்லக்கூடிய ஜெகவீரம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, சங்கர பாண்டியாபுரம், விளாமரத்துப்பட்டி, கண்ணக்குடும்பன்பட்டி, காமராஜர் காலனி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் சங்கரபாண்டியபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளிக்கு செல்வதற்கும் மற்றும் பொதுமக்களும் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்திற்கு பதிலாக குழாய் பலமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தரைப்பாலம் அருகே தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் தண்ணீர் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக தரைப்பாலத்தை குழாய் பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
                               
                  












; ?>)
; ?>)
; ?>)