மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இங்கு விரிவாக்கப்பட்ட பகுதியான ஆர் எம் எஸ் காலனி குடியிருப்பு உள்ளது அதன் அருகில் சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க் உள்ளது.

இங்கே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக காலை முதல் இரவு வரை சென்று கொண்டே இருக்கின்றன. இது குறித்து வாகனங்களில் செல்வோரும் அந்தப் பகுதி மக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் நேரடியாகவும் வாய்மொழியாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் மாடுகளுக்கு முறையான கயிறு அணிவித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். சாலை நடுவில் படுத்து கிடக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர்.




