பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு இடையூறாக திறக்கும் மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சுற்று பகுதி பொது மக்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் பிள்ளைகள் பயிலும் பள்ளி கூடம் வழிபாட்டு தலங்கள் நூலகம் மருத்துவமனை என நிறைந்த பகுதியாக உள்ளது.
இந்த இடத்தில் ஜாலி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான பார் திறக்க கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் மதுபான பார் கடையை திறக்க அனுமதி வழங்கவில்லை.
இது குறித்து மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் 2023 ல் வழக்கு தொடரபட்டு தற்போது வரை அந்த மது பான பார் கடையை திறக்க நீதிமன்றம் தடை விதித்தது இன்று வரை நீடித்து உள்ளது.
ஆனால் ஜாலி மனமகிழ் மன்றம் மதுபான பாரை திறக்க விரோதமாக நீதிமன்றத்தில் தனது உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்க அனுமதி வேண்டும் என கூறி பொய்யான காரணங்களைக் கூறி, மதுபான பார் நிர்வாகம் அனுமதி பெற்றதாக ஒரு தகவல் உலாவி வருகிறது.
அந்த மதுபான பார் கடையை அந்த இடத்தில் திறந்தால் மிக பெரிய அளவில் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் அந்த இடமும் மிக பெரிய பிரச்சினைக்குரிய இடமாக மாறும் அபாயம் உள்ளதால் தான் இரண்டு வருடங்களாக அந்த இடத்தில் மதுபான பார் கடையை திறக்க கூடாது என அனைத்து கட்சிகளும் பொது மக்களும் போராடி வருகின்றனர்.
பொது மக்களுக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் அந்த மதுபான பார்கடை திகழும் என்பதால் தான் இது வரை அந்த கடையை திறக்க கூடாது என நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் சட்ட விரோதமாக பொய்யான காரணங்களைக் கூறி, மதுபான பார் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட மதுபான பார் கடை குறித்து பொது மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அந்த கடையை எந்த விதத்திலும் திறக்க அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.