விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கணஞ்சாம்பட்டி கிராமம் இக்கிரமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் கட்டிட கழிவுகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட மக்காத பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் கொட்டப்படும் கழிவுகளினால் தண்ணீர் மாசு அடைய வாய்ப்பு உள்ளது. .ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதையும், வீட்டில் பயன்படுத்தப்பட்ட மக்காத குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.








