விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பிலான பாசனப்பரப்பு கண்மாய் உள்ளது. இதனை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தவும், சேதம் அடைந்த மடைகளை சீரமைக்கவும், நடவடிக்கை வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த மாதம் கண்மாய் சீரமைப்பு பணி தொடங்கியது.

இந்நிலையில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கண்மாய் முழுமையாக நிரம்பியது. இதனால் கண்மாய் சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. கண்மாயில் தண்ணீர் முழுமையாக தேங்கியும் சேதமடைந்த மடைகளை சீரமைக்கப்படாததால் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது சிரமம். இதனால் கோட்டைப்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, வல்லம்பட்டி, விஜய கரிசல்குளம், பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கப்படாமல் உள்ளனர்.

ஆகையால் மடைகளை சீரமைக்கும் பணியினை விரைவில் தொடங்கினால் மட்டுமே கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாய பணிகளை தொடங்க முடியும். ஆகையால் சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)