• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கை

முதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்கவேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது முதுமலை புலிகள் காப்பகம் இப்பகுதி கர்நாடகா செல்லும் சாலையாகவும் தெப்பக்காட்டில் இருந்து மசனகுடி மார்க்கமாக ஊட்டி செல்லும் சாலையும் இங்கு தான் அமைந்துள்ளது இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த பாலத்தினை புதுப்பித்துக் கட்டுவதற்காக பணிகள் துவங்கப்பட்டு பழைய பாலம் இடிக்கப்பட்டது.


இந்நிலையில் இப்பகுதியில் ஆற்றைக் கடந்து செல்ல பாலம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் கும்கி யானைகள் நடந்து செல்ல பாலம் இல்லாத நிலையில் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் தற்போது வளர்ப்பு கும்கி யானைகளை கொண்டு தற்காலிக மரத்தாலான பாலத்தினை கட்டும் பணி துவங்கியுள்ளனர். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதியில் மரத்தாலான பாலம் எந்த அளவிற்கு உதவும் என்பது தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் டெண்டர் முறையில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கினால் மட்டுமே உள்ளூர் பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது