மத்திய அரசு இ பஸ் சேவா திட்டத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 75 குளிர்சாதன பேருந்துகளை வழங்க தீர்மானித்து முதற்கட்டமாக 25 பேருந்துகளை வழங்கி உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அங்கமான காரைக்கால் பகுதிக்கு ஒரு பேருந்து கூட புதுச்சேரி அரசுக்கு வரை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயக்கப்படாத கிராமப் பகுதிகள் உள்ளதாலும் ஐந்து கொம்பன் பஞ்சாயத்துகளை கொண்டுள்ளதாலும் புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்த 75 பேருந்துகளில் காரைக்கால் மாவட்டத்திற்கு என பேருந்துகளை பகிர்ந்து அளிக்க வேண்டும் என காரைக்கால் போராளிகள் குழுவின் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் காரைக்கால் போராளிகள் குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
வழங்கப்பட்ட பேருந்துகளை காரைக்கால் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.