விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மற்றும் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. தாயில்பட்டியில் எட்டாயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் கோதை நாச்சியார்புரம், மீனாட்சிபுரம், இறவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இரண்டு ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போதுமானதாக இல்லை கூடுதலாக ஏடிஎம் மையங்கள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக இரண்டு ஏடிஎம்களும் மூடப்பட்டு இருப்பதால் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் செயல்படாத ஏடிஎம்களை செயல்படவும், கூடுதலாக ஏடிஎம் மையங்கள் அமைக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.