விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் ,பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது .இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் உடைப்பில் ஏற்பட்டு வெளியேறும் தண்ணீர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சத்துணவு மையம் முன்பு குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சத்துணவு மையம் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தடுமாறி விழ வேண்டிய நிலையில் உள்ளது.
மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து பள்ளிக்கூடம், சத்துணவு மையம், முன்பு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ ,மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.