வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் செல்லும் ரோட்டில் பொது நூலகம் அமைந்துள்ளது. நூலக கட்டிடம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

நூலகத்தின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் பள்ளி மாணவ, மாணவியர்கள், பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குடியிருப்புகளும் அதிகமாக அருகில் உள்ளதால் பொதுமக்களும் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளாக நூலக கட்டிடத்தை எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறததால் கட்டிடத்தின் மேற்கூரை உள்பட அனைத்து பகுதிகளும் சேதம் அடைந்து விட்டன.
இடிந்து விழும் அபாய நிலையில் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.








