விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் இருந்து குகன்பாறை வழியாக செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் வேலி மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

இதனால் இதன் வழியாக பட்டாசு ஆலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், தனியார் பள்ளிக்கு செல்லக்கூடிய வாகனங்கள், மற்றும் செவல்பட்டியில் இருந்து ஏழாயிரம் பண்ணை,கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வளைவில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோல் கோட்டைப்பட்டியில் இருந்து வல்லம்பட்டி செல்லும் வழியிலும் ரோட்டின் இரண்டு புறங்களிலும் வேலி மரங்கள் வளர்ந்துள்ளன.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வேலி மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




