• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் கால்நடை மருத்துவமனை, வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை..!

ByKalamegam Viswanathan

Feb 28, 2023

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால், அந்த இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்காக மேம்பாலத்தின் கீழே இரண்டு புறமும் போடப்படும் அணுகு சாலையானது, அதாவது சர்வீஸ் ரோடானது ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறைந்த அளவில் போடப்படுவதாகவும் பாலப்பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது விபத்துகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வருவதில் சிரமம் இருப்பதாகவும், ஆகையால் சர்வீஸ் ரோட்டிற்கு இடைஞ்சலாக உள்ள அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகம் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்..