பரவை துவரிமான் வைகை ஆற்று பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை
மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவை துவரிமான் வைகை ஆற்று பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படதால் மக்கள் பணம் சுமார் 18 கோடி வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்த பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பாலத்தை நேரில் பார்வையிட்டு குடியிருப்பு பகுதிகளில் அமைக்க வேண்டிய தார்சாலை பணிகளுக்காக இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்திருந்தார்.ஆனால் அதன் பிறகும் பாலத்தை திறப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்காததால் பொதுமக்கள் துவரிமான் பகுதியிலிருந்து பரவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக கூறுகின்றனர்.இதனால் பொதுமக்களின் நலன் கருதியும் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்திற்கு பயனுள்ளதாக உள்ள இந்த பாலத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..