மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் வாடிப்பட்டி பேருந்துகள் நிற்கக்கூடிய பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக இரவு மற்றும் காலை நேரங்களில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

தினசரி காலை 6 மணிக்கு சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் திறந்தவுடன் வாடிப்பட்டி சாலை ரயில்வே பிடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல.ஆயிரம் லிட்டர் குடிநீர் எட்டு மணி வரை வீணாக செல்கிறது இதுகுறித்து சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் சாலையில் குடிநீர் செல்வதால் கழிவு நீர் குடிநீர் குழாய்களில் கலந்து குடிநீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பல மாதங்களாக வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






