• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வீட்டை இடித்து புதிய வீடு கட்ட கோரிக்கை….

ByJeisriRam

Nov 26, 2024

இடிந்து விழுந்த நிலையில் உள்ள வீட்டை இடித்து புதிய வீடு கட்ட அரசு உதவி செய்ய வேண்டுமென வயதான பெண்மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி தாலுகா, நாகலாபுரம் ஊராட்சி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (லேட்) கல்யாணி (60). இவருடைய வீடு முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் மகள் ஜானகி, மகன் கருப்பசாமி மருமகள் செல்வி பேத்தி பவித்ரா மற்றும் மாற்றுத்திறனாளி மகன் தர்மராஜ் உள்ளிட்ட ஆறு பேர் இந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

தற்பொழுது மழைக்காலம் என்பதால் இந்த வீட்டு மேலும் சேதம் அடைந்து வீட்டில் தண்ணீர் அருவி போல் கொட்டி இந்த வீட்டில் இவர்களால் படுத்து தூங்க கூட முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.

எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டை இடித்து விட்டு புதிதாக அரசு வீடு கட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே வீடு இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் முன்னர் வீட்டை இடித்து விட்டு அரசு வீடு கட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டுமென கல்யாணி கோரிக்கை விடுத்துள்ளார்.