• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பட்டாசு விற்பனை வெப்சைட்களை முடக்க கோரிக்கை.,

ByK Kaliraj

Aug 25, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பட்டாசு வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனையால் நடைபெறும் மோசடி குறித்தும் இதனால் நேரடி வியாபாரம் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திர சேகரன்,

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கும் நிரந்தர பட்டாசு கடைகளுக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விரைவில் உரிமம் வழங்கிட வேண்டும்.

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் ஆனலைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடுக்க வேண்டும்

ஆன்லைன் வர்த்தகம் உரிய அனுமதி இல்லாமலும், ஜிஎஸ்டி வரி காட்டாமலும் முறைகேடாக நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் பட்டாசு வர்த்தகம் மேற்கொண்டு மோசடியில் ஈடுபடும் ஆன்லைன் வெப்சைட்களை சைபர் கிரைம் காவல்துறை மூலம் முடக்க வேண்டும்.

ஆன்லைன் பட்டாசு வணிகம் மூலம் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் 30 சதவீதம் பாதித்து 100 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தொடர் வெடி விபத்து மற்றும் விபத்தின் காரணமாக ஆய்வு நடவடிக்கைகளால் 30 சதவீத பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசு தட்டுப்பாடு காரணமாக தீபாவளிக்கு பட்டாசு விலை உயர வாய்ப்புள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி கும்பல் ஆன்லைனில் உலா வருவதால் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்.

நேரடியாகவோ அல்லது பட்டாசு கடைகளை தொடர்பு கொண்டோ பட்டாசுகள் வாங்கிட வேண்டுகோள். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது போல் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்திற்கும் அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.