புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமரகண்டான் கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றியவரும் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் புதன்கிழமைதோறும் ரத்த சோதனை செய்யப்படும் நிலையில் வழக்கம் போல பொதுமக்கள் ரத்த சோதனை செய்ய வந்த நிலையில் சோதனை செய்யும் அலுவலர் காரையூர் சென்றதால் சோதனைக்கு வந்த முதியோர்களை காரையூருக்கு செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் அறிவுறித்தினர். இதனால் முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 9:45 வரை எந்த மருத்துவரும் இல்லாததால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அலட்சியமாக செயல்பட்டு பொதுமக்களை மற்றும் முதியோர்களை அலைக்கழிக்கும் மருத்துவர், தாமதமாக பணிக்கு வரும் மருத்துவர்கள் மற்றும் அலட்சியமாக செயல்படும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.