• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்ய கோரி வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய கார்களை, அதன் உரிமையாளர்கள், வாடகைக்கு பயன்படுத்தி வருவதாக கூறி வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு முறையாக வரிகள் செலுத்தி உரிமம் பெற்று வாடகை கார்களை இயக்கி வருவதாகவும், ஆனால் சொந்த பயன்பாட்டிற்காக காரை வாங்கி கொண்டு, அரசை ஏமாற்றி வாடகைக்கு பயன்படுத்தி வருவதால், தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.