• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

PRS வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம்- மாநகர காவல் ஆணையாளர் திறந்து வைப்பு…

BySeenu

Jul 15, 2024

கோவை PRS வளாகத்தில் கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதுமட்டுமின்றி இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசை வாதியங்களுக்கான அறை, மின்சார அறைகளும் காவலர்களுக்காக புதிய கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் காவலர்களுடன் உரையாடிய மாநகர காவல் ஆணையாளர், பழைய கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என்பதால் இதனை மறுசீரமைத்ததாக தெரிவித்தார். மேலும் காவலர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறைகளும், கவாத்து பயிற்சி மேற்கொள்ளும் காவலர்களுக்காக இதே பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பாக பெண் காவலர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.