• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையின் பெயர் மாற்றம்

ByA.Tamilselvan

Sep 6, 2022

வரலாற்று சிறப்பு மிக்க ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ராஜ்பாத் என்ற பெயரை கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ராஜபாதையை மேம்படுத்தி, அழகுபடுத்தும் அனைத்துப் பணிகளும் திட்டமிட்டப்படி வேகமாக நடந்து வருகின்றன. வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாதை என மாற்றப்பட்டுள்ளது.