கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்பு நடைபாதை பகுதியில் இருந்த திண்ணை அகற்றம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் ஆயிரக்கணக்கில் பன்மொழி சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதிகளில், கன்னியாகுமரி ரவுண்டானா பகுதி முதல் விவேகானந்தா புரம் வரையில், சாலையின் இரு மருகிலும் பல்வேறு வகையான கடைகள், மருத்துவ மனை, தங்கும் விடுதி நடத்துபவர்களில் பெரும்பான்மையோர் பொது நடைபாதயை ஆக்கிரமித்து வைத்துள்ளதால், பாதசாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் பிரதான சாலையில் இரு பக்கமும் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில், கன்னியாகுமரி இரயில் நிலையத்திற்கு முன் உள்ள சாலையில் நேற்று இரவு(மார்ச்_09) மூன்று இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாத வேகத்தில் வந்ததில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சாலையில் கும்பலாக நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் மீது மோதியதில் மூன்று பேர் சாலையில் சரிந்து விழுந்த நிலையில், ஒருவருக்கு பலமான காயம் ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளது.



கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட விபத்தை அடுத்து, குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் உடனடி நடவடிக்கையாக, கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் தொடங்கி, விவேகானந்தபுரம் வரை சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதியை அகற்ற உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் கட்டமாக கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு எதிராக உள்ள கடைகள் ஆக்கிரமித்துள்ள நடைபாதை பகுதியில் உள்ள பகுதிகள் ஜேசிபி வாகனம் கொண்டு போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்படுகிறது.
இந்த பணியில் பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.





