• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

புஷ்பாவில் கசமுசா காட்சிகள் நீக்கம், நேரம் குறைப்பு?

இந்தியாவின் அனைத்து மொழி சினிமா ரசிகர்களிடம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் டிசம்பர்17 அன்று. உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.


ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், பாடல்கள் வெற்றி அதனையொட்டிய சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி, கேரளாவில் ஒரு நாள் தாமதமாக வெளியீடு எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக முதல்நாள் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது இருந்தபோதும் வணிகரீதியான வெற்றிக்காக போராட்டத்தில் புஷ்பா படம் உள்ளது காரணம் இந்தப் படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு குறைவாக இருப்பதாக கருத்து எழுந்தது. அதற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையே காரில் நடைபெறும் காதல் காட்சி, சமந்தாவின் உச்ச கட்ட கவர்ச்சி நடனம் உட்பட சில கசமுசா காட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது.

அந்தக் காட்சிகளின் வடிவமைப்பும் வசனமும்ஆபாசமாக இருந்ததால் அக்காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் 3 மணி நேரம் 5 நிமிடம் ஓடுவதால் சிறு தொய்வை ஏற்படுத்துவதாகவும் கருத்துகள் எழவே கார் சீனுடன் இன்னும் சில காட்சிகளும் நேரம் கருதி நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இன்று டிசம்பர் 20 முதல் நேரம் குறைப்புக்காக நீக்கப்பட்ட பிரதியாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது