



மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக

போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனிநபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்வாடிப்பட்டியில் சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை தறையினர் கடந்த மாதம் அளவீடு செய்தனர்.அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் தாழ்வாரங்கள் சிமெண்ட் தரைகள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்அகற்றிட கடந்த வாரம் காலக்கெடு கொடுக்கப்பட்டு 16ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற போவதாக ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் இந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை தாங்கலாகவே அகற்றியது குறிப்பிடத்தக்கது

