• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனுமதி இன்றி வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றம்..,

ByV. Ramachandran

Aug 8, 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர்.

தெற்கு ரத வீதியில் எந்த விளம்பர பதாகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறி போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் விளம்பரப் பதாகைகளை அகற்றப்பட்டது. விளம்பரப் பதாகைகளை அகற்றும் போது காந்திநகர், கக்கன் நகர் சமுதாய ஊர் முக்கிய பிரமுகர்கள் அந்த பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.