• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

16வது கோவை விழாவிற்கான லோகா வெளியீடு..!

BySeenu

Nov 25, 2023
கோவை விழா தொடக்கத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று கோவை விழாவின் இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.
கோவையின் பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் ஆண்டுதோறும் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை 16வது கோவை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கான இலச்சினை வெளியீட்டு விழா ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் இன்று நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் ல் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை விழாவிற்கான இலட்சினையும், கோவை விழா மாரத்தானுக்கான டி-சர்ட்-ஐயும் வெளியிட்டனர். 
இதுகுறித்து கோவை விழா தலைவர் ராகுல் கமத் கூறுகையில்..,
“கோவை விழாவில் இந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டும் டபுள் டக்கர் பேருந்து மக்களுக்கு இலவசமாக இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்து கிறிஸ்துமஸ் தொடங்கி 20 நாட்களுக்கு இயங்கும். இதில் பயணம் செய்ய கோயம்புத்தூர் விழா செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். உள்ளூர் ஓவியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஓவியச் சந்தை நடைபெறுகிறது. கோவையில் செயல்பட்டு வரும் பல்வேறு உணவகங்களை ஒருங்கிணைத்து உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. இதுதவிர கார் மற்றும் பைக் பேரணி, பள்ளி மாணவர்களின் ஒற்றுமைப் பயணம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஒற்றுமைப் பயணத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெவ்வேறு வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று வந்து ஒன்றாக கூடி மத ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர். இந்த ஆண்டு ஒற்றுமைப்பயணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 
இந்த முறை குளக்கரையில் லேசர் ஷோ நடைபெறவில்லை. மாறாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் பேண்ட் வாத்திய கச்சேரியும், இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.