சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சபரிமலை பம்பா கணபதி கோயிலில் இருந்து சன்னிதானம் வரை உள்ள நடை பாதையை பேவர் பிளாக் கற்களை கொண்டு கட்டுமானம் செய்துள்ளார்கள்.
காணொளியில் காணும் மலைப்பாதையில் 70சதவீதம் மலைப்பாதை வேலை முடிந்து விட்டது. மேலும் சன்னிதானம் வரை இந்த கற்கள் பதிக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது.