

கரூரில் பருவமழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி, இன்று, அமராவதி மற்றும் காவேரி ஆற்றுப்பகுதிகளான 5 இடங்களில் நடைபெற்றது.
கரூரில் பருவமழை காலங்களில், பலத்த மழை காரணமாக, ஆற்றில் அதிக நீர்வரத்து இருக்கும்போது, பொதுமக்களின் உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக, கரூர் மாவட்டத்தில் இன்று மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை, ஐந்து இடங்களில் நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் தலைமையில் அமராவதி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரி ஆற்றுப்பகுதிகளான தவிட்டுப்பாளையம், மாயனூர், வாங்கல் மற்றும் குளித்தலை கடம்பன் கோயில் பகுதிகளில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஶ்ரீ மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் மேலாண் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.

