சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1,840.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து அறிவித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி இருந்து வரும் நிலையில், இன்று ஜூன் 1ம் தேதி வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டு, ஒரு சிலிண்டர் ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று சில மாதங்களாகவே எதிர்பார்த்து காத்திருக்கும் இல்லத்தரசிகளுக்கு இம்முறையும் அதிர்ச்சியை தரும் விதமாக வீட்டு பயன்பாட்டுக்காக சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
