சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பாரம்பரியமானது பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி. 400 ஆண்டுகளாக நடைபெறும் இந்த யாத்திரைக்கு வித்திட்டவர்கள் நகரத்தார்.
அப்போது அவர்கள் சென்ற வயல் வரப்பு, கண்மாய் கரைகளில் காவடியுடன் செல்வதை இன்றளவும் கடைப்பிடிக்கிறார்கள். 160 கி.மீ. தூர யாத்திரையை 6 நாட்களில் நடந்து பழநிக்கு செல்கின்றனர்.நேற்று குன்றக்குடியில் கூடிய பக்தர்கள் அங்கு இருந்து யாத்திரையைத் துவக்கினர். நேற்று காலை நகரத்தார் காவடி கண்டவராயன்பட்டி பகுதிக்கு வந்தது. வரும் வழியான கண்டவராயன்பட்டி கண்மாய் கரையில் கற்கள் அதிகம். இதனால் நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்கள் பாதம் புண்பட்டு காவடி மாற்றப்படும் சூழல் ஏற்படும்.இதற்காக, கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த இளங்குமரன் (66) என்பவர், கற்கள் பக்தர்களின் பாதத்தை குத்தி விடாமலிருக்க கண்மாய் கரை முழுவதும் சிவப்புக் கம்பளம் விரிக்க ஏற்பாடு செய்திருந்தார். இரண்டரைக் கி.மீ.துாரத்திற்கு இந்த கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இளங்குமரன் கூறுகையில், “22 வருஷமாக காவடி எடுத்துள்ளேன். உடல் நலம் இல்லாததால் நான் யாத்திரை செல்வதில்லை. கண்மாய் கரையில் நடக்கும்போது பக்தர்களின் பாதத்தில் கற்கள் குத்தி சில காவடிகள் மாற்றப்படுவதை பார்த்தேன்.இதனால் பக்தர்கள் சிரமமின்றி செல்ல என்னால் முடிந்ததை நான்கு ஆண்டுகளாக செய்கிறேன். இப்பகுதி பாரம்பரிய பாதைகளில் உள்ள புதர்களையும் அகற்றி சீராக்குவேன்” என்றார்.
- இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் […]
- வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம்உலக வரலாற்றில் அழியா சரித்திரம் பெற்ற சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” […]
- பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக […]
- இபிஎஸ்-ன் அடுத்த கட்ட நகர்வு.. அவசர வழக்காக மேல்முறையீடு!!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி […]
- அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!!அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா […]
- ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் […]
- மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]
- ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை […]
- இனி பேருந்தில் செல்ல சில்லறை தேவையில்லை… ஒரு க்யூஆர் கோட் போதும்!தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]
- 35 ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்புஉலக அளவில் குரங்கை அம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைகடந்துவிட்டதாக அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க […]
- அழகு குறிப்புகள்மென்மையான சருமத்திற்கு: குழந்தையைப் போல மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 […]
- சமையல் குறிப்புகள்சோயா உருண்டைக்குழம்பு: தேவையான பொருட்கள்: தாளிக்க :சீரகம் : 1 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு […]
- கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்இலங்கையில் அந்த நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அடுத்தவாரம் […]
- கிசான் திட்டம்… அடுத்த மாதம் 12ஆம் தவணை..இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் […]