• Sat. Apr 27th, 2024

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு!..

Byமதி

Oct 13, 2021

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 39 கிரவுண்டு இடம் சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கட்டிடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து, 132 கிரவுண்டு இடம், அதாவது ரூ.250 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இடத்தை அப்படியே விட்டுவிடாமல் கோவிலுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலுடன் பணிகள் தொடங்கப்படும்.

பக்தர்களின் குறைகளை களைவதற்காக குறைகள் பதிவேடு துறை ஆரம்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால், தொலைபேசி எண்ணை அறிவித்து அதன்மூலம், இதுவரை 4 ஆயிரத்து 500 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களை மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எச்.ராஜாவின் இந்து சமய அறநிலையத்துறை பற்றிய விமர்சனங்கள் கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *