மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த உயர் தர சிகிக்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையும், அரசின் ஹோமியபதி கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.

இதன் அருகாமையில் உள்ள குடியிருப்பில் மாற்றுதிறனாளிகள் பலர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் காலி இடத்தினை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு நிலத்தடி நீர் உயருவதற்கு வசதியாகவும் , குடியிருப்பு மக்களுக்கு குடிநீருக்கு ஆதாரமாகவும், ஆடு மாடுகளுக்கு குடிநீராகவும் பயன்படுவதற்காவும் மழை நீர் சேமிப்பதற்கு என்றுஊரணி அமைப்பது என்று தோப்பூர்ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படியே ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுமார்50 செண்ட் இடத்தினை ஊராட்சி நிர்வாகம் மீட்டது. ரூ 10 லட்சத்தில் புதிய ஊரணி இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த்கிருஷ்ணா, திட்ட அலுவலர் சதிஸ்பாபு ஆகியோர் உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லெட்சுமிகாந்தம்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி , ஊராட்சி செயலர் வேல் முருகன்கியோர் மேற்பார்வையில்ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 50 செண்ட் இடத்தில் அடர்ந்து படர்ந்து இருந்த முட்புதர்களை அகற்றி இடத்தை சமப்படுத்தினார்கள்.
இதற்கிடையில் மத்திய அரசின் வி. பி. ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சத்தில் ஊரணி அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தோப்பூர், மூணான்டிபட்டி கோ. புதுப்பட்டி மக்கள் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நிலையில் நேற்றுஉதவி செயற்பொறியாளர் அனிதா,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன்,பணி மேற்பார்வையாளர் ஜெயசித்ரா,ஊராட்சி செயலர் வேல்முருகன் ஆகியோர்ஊரணி அமைக்கும் பணியை நேரடியாகபார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
