புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந் மாதா ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகள் அதிர்ஷ்டம், ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந்மாதா மாதா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலில் கடந்த மாதம் 5ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் அதி விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந்மாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜகந்மாதா ஸ்ரீபுவனேஸ்வரிக்கு பூஜ்யஶ்ரீ பிரணவானந்த சுவாமிகள் முன்னிலையில் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டன இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.