• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெளிநாடுகளுக்கு மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி…

Byமதி

Oct 26, 2021

வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். சமீபத்தில் 100 கோடியை கடத்தது தடுப்பூசி செழுத்தியவர்களின் எண்ணிக்கை.

2-வது அலை வேகமெடுத்ததை போது தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது. தற்போது அதிக அளவில் உற்பத்தி மற்றும் உள்நாட்டு தேவைகள் வேகமாக பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்துள்ளது. எனினும் மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி, உள்நாட்டின் தேவைகளை பாதிக்கக்கூடாது’ என்றும் தெரிவித்தார்.