வாகன பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 8ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு வருகை ரும் எடப்பாடியார் அவர்கள் எழுச்சியுரையாற்ற இருக்கிறார்.

புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் கரத்தை வலுபடுத்த இதுவரை எங்கும் காணாத மக்கள் கூட்டத்தை சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திரட்டு அதற்கான வாகன பிரச்சாரத்தை,
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் விதமாக சாத்தூர் அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகர,ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.