• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம் கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு

Byமதி

Nov 6, 2021

ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா பரலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கியது. இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இத்திட்டத்தின்கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இப்பணி நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது, தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது. அந்த அளவுக்கு அரிசி, கோதுமையை வினியோகித்துள்ளோம். எனவே, வருகிற 30-ந் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது என்று அவர் கூறினார்.