• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ByA.Tamilselvan

May 17, 2022

இந்திய ஜனாதிபதி ஒருவர் ஜமைக்கா நாட்டுக்குசெல்வது இதுவேமுதல்முறையாகும். நேற்று இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார்
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் 60 ஆண்டுகளா நட்பை வெளிப்படுத்தும் விதமாக இந்திய ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் தொடரில் உரையாற்றுகிறார்..
ஜமைக்காவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பாலமாக உள்ளனா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.