டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள நொய்டா நகரில் “தி எல்லோ ஹவுஸ்” என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ராஜஸ்தான் ஜெய்பூர் நகரில் இந்த உணவு விடுதியின் 3 கிளைகளில் ரோபோக்கள் உணவு பரிமாறி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது நொய்டாவில் உள்ள உணவு விடுதியில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த உணவு விடுதியின் உரிமையாளர் ஜூஷீ ஆனந்த் கூறியது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த ரோபோக்கள் செயலாற்றுகின்றன. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மேஜையில் இருந்து பெறப்படும் உணவு ஆர்டர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அனுப்பப்படும். ஒரு செல்போன் அல்லது டேப்லட் வழியில் எண்ணை பதிவு செய்து விட்டால் இந்த ரோபோக்கள் அந்த மேஜைக்கு சென்று உணவை பரிமாறி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த ரோபோக்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்து விட்டால் போதும் நாள் முழுவதும் அது செயலாற்றி வருகிறது. இந்த புதிய ரோபோக்களின் வரவு வாடிக்கையாளர்களைக் அதிகமாக கவர்ந்துள்ளது.