குழந்தைகள் விரும்பி உண்ணுகிற கலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கவரும் நோக்கத்தோடு அப்பளம் உள்ளிட்ட பல பாக்கெட் உணவுகளில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.குழந்தைகளை உள்ளிட்ட பொதுமக்களை கவரும் நோக்கதோடு சாதாரணமாக விற்கப்பட்ட அப்பளங்கள் தற்போது கலர் சேர்த்து விற்கப்படுகின்றன. வண்ணத்தால் கவரும் மக்கள் அதை வாங்கிச் சென்று பொரித்து சாப்பிடுகின்றனர், குழந்தைகளும் நிறத்தால் ஈர்க்கப்பட்டு அதிகமாக சாப்பிடுகின்றனர்.இந்த அப்பளங்களில் சேர்க்கப்படும் நிறமிகள் ரசாயன பொருட்கள் கலந்திருப்பதால் உடலுக்கு பலகெடுதல்களைஉருவாக்குகிறது.
எனவே வண்ணம் சேர்க்காத அப்பளம் தான் சாப்பிட வேண்டும் என்றும், இதுபோன்ற ரசாயன நிறமிகள் சேர்க்கப்பட்ட அப்பளம், வத்தல் சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது என்று உணவுத்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளார்.கலர் வத்தலில் சிந்தடிக் வகையான வேதிப் பொருள் இருக்கிறது என்றும், அது குடலில் போய் தங்கி புற்றுநோயை உருவாக்கும் என்கிறார் அவர். அப்பளம் சாப்பிட ஆசைப்படுபவர்கள், கலர் இல்லாத அப்பளம் சாப்பிட வேண்டும் .
கடைகளில் கலர் சேர்த்து விற்கப்படும் அப்பளம் மற்றும் வத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து அவற்றை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.