• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக ரமேஷ் தேர்வு

ByA.Tamilselvan

Jul 4, 2022

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் தலைவராக ரமேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை அருகேயுள்ளது நிலையூர் கிராமம் . அங்குள்ள பெரிய கண்மாய் மூலம் நிலையூர்,குத்தியார்குண்டு,கருவேலம்பட்டி,சூரக்குளம்,சொக்கநாதன்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.
.இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.ரமேஷ் போட்டியிட்டார்.மேலும் உறுப்பினர் பதவிக்கு கண்ணப்பன்,அய்யங்காளை,விஜயலட்சுமி,சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர் .

நடந்த முடிந்த இத்தேர்தலில் விவசாயிகளின் நம்பிக்கை நாயகனாக கூத்தியார்குண்டு ரமேஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமேஷ்க்கு வாக்களித்த அனைத்து விவசாயிகளுக்கும் நிலையூர் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுசார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.