விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி இராமலிங்கபுரத்தில் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தன. திருப்பணி வேலைகள் முடிந்து நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து கணபதி ஹோமம் தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து விமான கலசத்திற்கும் அருள்மிகு இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடந்தது.
சிறப்பு வழிபாட்டில் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் கலந்து கொண்டார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து கும்பாபிஷேக கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி அம்பலக்காரர் அம்பி ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.




