• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

ByM.I.MOHAMMED FAROOK

May 19, 2026

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை செயல் பட்டு வருகிறது இங்குதினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர் 500க்கும் மேற்பட்டோர்உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக தற்போதுநாய்க்கடி சிகிச்சைக்காக அதிகமானோர் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். வெளியில் நாய் கடித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தால் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே நாய்கள் சுற்றித் தருவதைப் பார்த்து நோயாளிகள் அதிர்ச்சி அடைகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு பயிற்சி செவிலியர் ஒருவரைமருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே இருந்த நாய் ஒன்று கடித்த சம்பவமும் அரங்கேறி உள்ளது.

நாயின் உமிழ்நீரே உயிரை எடுக்கும் அளவிற்கு கொடியதானது என கூறப்படும் நிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாய்களை அங்கிருந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.