• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அனுமதி இல்லாமல் பேரணி- இம்ரான்கான் மீது வழக்கு

ByA.Tamilselvan

Aug 24, 2022

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற இம்ரான்கான் அந்தநாட்டின் தலைமை போலீஸ் அதிகாரி, தேர்தல் ஆணையம் மற்றும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது
இந்த நிலையில் இம்ரான் கான் மீது பாகிஸ்தான் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் அவர் கட்சி சார்பில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாகவும்.அதில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப் பட்டதாகவும் இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.